முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உதைபந்தாட்ட விதிகள்

1. உதைபந்தாட்ட மைதானம். மைதானம் சதுரமாக இருப்பது முக்கியம். அதன் எல்லைகள் கோடுகளால் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். மைதானத்தின் நீளம் 90மீ(100யார்) முதல் 120 மீ (130 யார்)வரையும்1 மைதானத்தின் அகலம் 45 மீ(50 யார்) முதல் 90 மீ (100 யார்) வரையும் இருக்க வேண்டும். நாடுகளுக்கிடையில் நடைபெறும் விளையாட்டுக்களில் நீளம் 100மீ(110 யார்) முதல் 110மீ (120யார்) வரையும் அகலம் 64மீ(70யார்) முதல் 75 மீ(80 யார்) வரையும் இருக்கும். இரு அகலக் கோடுகளை கோல் கோடுகள் என்றும் (கோல் கம்பங்களுடன் சேர்ந்து செல்வதால்)மற்றவையை பக்கக்கோடுகள் என்றும் அழைக்கலாம். பக்கக் கோடுகள் எப்போதும் அகலக் கோடுகளை விட நீளமாக இருக்க வேண்டும். மைதானத்தின் உள்ளே சில இடங்கள் குறிப்பிட்ட பிரதேசமாக வரையறுக்கப்பட வேண்டும் மைதானம் மத்திய எல்லைக் கோட்டினால் இரு பிரதேசங்களாகவும் மற்றும் 5 மீ பிரதேசம் (கோல் பிரதேசம்) 16 மி பிரதேசம் (பனால்டி பிரதேசம்) எனவும் அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். எல்லைக் கோடுகளின் அகலம் சரியாக 12 செ.மீ ஆக இருக்க வேண்டும். கோல் கம்பங்கள் கோல் கோடுகளின் மத்தியில் நாட்டப் பட்டிருக்க வேண்டும். அதன் உயரம் 2,4